11ஆம் வகுப்புக்கான பாடங்களை வாசிக்க

11ஆம் வகுப்பின் பாடங்களும் விரிவுரைகளும்

பதினொன்றாம் வகுப்புக்கான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பகுதிகளுக்கான எல்லாப்பாடங்களின் உரைகளையும் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றியிருக்குறோம். பெரும்பான்மையானவற்றுக்கு விரிவுரைகளையும் இயூடியூபில் வழங்கியிருக்கிறோம். எஞ்சிய சில பாடங்களின் விரிவுரைகளை விரைவல் வழங்கி இயூடியூபில் பதிவேற்றுகிறோம்.

நோக்கம்

கல்வியின் முதன்மையான பணி மாணவர்களுக்கு அறிவை வழங்கி வாழ்வில் எழும் சிக்கல்களை தீர்க்கும் திறமையை வளர்த்து அவர்களை சிறந்த சிந்தனையாளர்களாக ஆக்குவது என்ற கொள்கையின் அடிப்படையில் மாணவர்களும் பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுத்தாலும் பேச்சாலும் அறிவுத்துறைகளின் தலைப்புகளை உயர்நடைத்தமிழில் வழங்குவது தமிழ்வழியறிவுக்குழுவின் நோக்கம்.

குழுவினர்

வெளிநாடுகளிலும் தமிழ்நாட்டிலும் அறிவியலாராய்ச்சியாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் பணியாற்றி ஓய்வுற்ற மூதறிஞர்களும் அண்மைக்காலத்தில் முனைவர்பட்டம்பெற்று பணியிலிருக்கும் இளம் அறிவியலர்களும் தமிழ்நாட்டின் கல்வித்துறையில் பணியாற்றிய கல்வியாளர்களும் இந்த குழுவில் இருக்கிறோம்.

குழுவினரின் பின்னணி

பாடநூல்கள்

இந்தியாவில் ‘கல்வியின் ஆராய்ச்சிக்கும் பயிற்சிக்குமான தேசிய மன்றம்’ (கவாபதேம, NCERT) என்ற அமைப்பு தரமான நூல்களை ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிட்டிருக்கிறது. இரண்டாமைக்கல்வியின் மைய வாரியம் (இகமைவா, CBSE) இந்த பாடத்திட்டத்தையும் பாடநூல்களையும் பின்பற்றுகிறது. நாங்கள் இந்த நூல்களை தேவையானபோது சற்று மாற்றியமைத்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறோம். அதன் அடிப்படையிலே உரைத்தொடரை வழங்குகிறோம். எனவே, இந்த உரைத்தொடரும் இகமைவாவின் பாடத்திட்டத்தை பின்பற்றுகிறது.

விரிவுரைகள்

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒன்றும் ஞாயிற்றுகிழமை ஒன்றுமாக இரண்டு விரிவுரைகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் விரிவுரை சூலை 5ஆம் நாள் சனிக்கிழமை மாலை 2:30க்கு தொடங்கியது. வெளிநாடுகளிலிருந்து உரையாற்றும் அறிஞர்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமையின் சில உரைகள் காலை 10:00 மணிக்கும் மற்றவை மாலை 6:30 மணிக்கும் திட்டமிடப்பட்டுள்ளன. சனிக்கிழமையின் உரைகள் மாலை 6:30க்கு தொடங்குகின்றன.

தொடர்புக்கு

இயூடியூபு: அறிவுக்குழு என்ற காணோடையில் பங்குசேர்க.

https://www.youtube.com/channel/UCiVsLW9xmawCsnUEpt-MQHA

முகநூல்: https://www.facebook.com/profile.php?id=61577759098911

மின்னஞ்சல்: arivukuzhu@gmail.com