செயபாண்டியன் கோட்டாளம் சென்னைப்பல்கலைக்கழகத்திலும் சென்னையிலுள்ள இந்தியத்தொழினுட்பப்பயிலகத்திலும் வேதியியலில் அறிவியற்பட்டங்களைப்பெற்று அவொமாவிலுள்ள மிச்சிகன் மாநிலப்பல்கலைக்கழகத்தில் 1984இல் முனைவர்ப்பட்டத்தை பெற்றார். சாண்டியேகோவின் கலிபோனியா பல்கலைக்கழகம், கிரிப்பசு ஆராய்ச்சிப்பயிலகம், ஆர்வடு பல்கலைக்கழகம், கிரே ஆய்வகம் முதலிய இடங்களில் நோபல்சூடிய  பேராசிரியர் கார்ப்பிளசு முதலியோருடன் வேதியியலில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி, புரதம், உட்கருவமிலம் போன்ற  பெருமூலக்கூறுகளின் கட்டமைப்பையும் இயக்கங்களையும் மிகைக்கணினியில் பாவனையாக்குவதற்கான மென்பொருளை உருவாக்குவதில் பங்களித்தார்.  2014இல் பணியோய்வுக்குப்பின் ஆங்கிலமொழியிலுள்ள அறிவியற்செல்வங்களை திட்டமிட்ட ஒழுங்குமுறையில் தமிழுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

க. இயோகராசன் சிவகாசியிலுள்ள மெப்புகோசிலங்கின் பொறியியற்கல்லூரியிலிருந்து மின்னியலிலும் மின்பொறியியலிலும்   இளம்பொறியியற்பட்டத்தையும் முதுப்பொறியியற்பட்டத்தையும் பெற்றார். விசவெநா பலதொழினுட்பக்கல்லூரியில்  27 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி  தன்விருப்பமாக ஓய்வுற்று, 2017இல் கலாபாரதி அறிவகம் என்ற கல்விக்காணோடையை  உடனிறுவினார்.  உயரிரண்டாமை மாணவர்களுக்காக கலாபாரதியிலிருந்து 6000த்துக்கு மேற்பட்ட கல்விக்காணொளிகளை  வழங்கியிருக்கிறார்.

அ. தாமரைசெல்வன் பணியோய்வுபெற்ற வேதியியற்பேராசிரியர். இவர் இளவறிவியலிலிருந்து  முனைவர்வரையான பட்டங்களை மதுரையிலுள்ள காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார்.  68 ஆராய்ச்சிக்கட்டுரைகளை பதிப்பித்து, 20 முனைவர்ப்பட்ட மாணவர்களுக்கும் நூற்றுக்கணக்கான முதுவறிவிய மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.   கல்விநிறுவனங்களில் முதல்வராகவும் புலத்தலைவராகவும் பணியாற்றினார்.  உயர்கல்விக்கான பாடத்திட்டத்தை வகுப்பதிலும் போட்டித்தேர்வுகளுக்கான கேள்விகளை எழுதுவதிலும் பங்கேற்றிருக்கிறார். 

நாகேசுவரன் இராசேந்திரன் மதுரையிலுள்ள சரசுவதி நாராயணன் கல்லூரியிலிருந்து இயற்பியலில்  இளவறிவியற்பட்டத்தையும் சென்னையிலுள்ள இந்தியத்தொழினுட்பப்பயிலகத்திலிருந்து முதுவறிவியற்பட்டத்தையும் பெற்றார். பெங்களூரிலுள்ள இந்திய வானியற்பியற்பயிலகத்திலும்  இந்திய  அறிவியற்பயிலகத்திலும், இடாய்ச்சுலாந்திலுள்ள  தாருத்துமுண்டு தொழினுட்பப்பயிலகத்திலும் பணியாற்றியபின், இப்போது இங்கிலாந்திலுள்ள கேம்பிரிசில் தம் ஆராய்ச்சியை தொடர்கிறார். இவர் கருந்துளைகள், துணுக்கநிறையீர்ப்பு, சுழல்விண்வெளியியவொப்புரு ஆகியவற்றின் துணுக்கத்தகவற்கூறுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார்.

மு. பிரபாகரன் சென்னைப்பல்கலைக்கழகத்திலிருந்து  உயிரிய இயற்பியலில் முனைவர்ப்பட்டத்தை பெற்றார். சென்னையிலுள்ள பிரசிடென்சிக்கல்லூரியில் உதவிப்பேராசிரியராக  பணியாற்றி தமிழ்வழி கற்பித்தார்.  பிறகு அவொமாவுக்குச்சென்று மருந்துத்தொழிலகத்தில் மூலக்கூறொப்புருவாக்கம், கணினியுதவும் மருந்துவடிவமைப்பு, மரபியச்சோதனை போன்ற புலங்களில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி ஓய்வுற்றார். 

பழனிசாமி இரத்தினசாமி சென்னைப் பல்களைக்கழகத்திலிருந்து உயிரியவேதியிய லில் முனைவர்ப்பட்டத்தை பெற்றார். மமேவாசபவின் (மருத்துவ மேற்பட்டக்கல்விக்கும் ஆராய்ச்சிக்குமான சவகர்லால் பயிலகத்தின் ஆசிரியக்குழுவில் பணியாற்றி மருத்துவமாணவர்களுக்கு கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். கனடாவின் கியூபெக்கிலுள்ள இலுவால் பல்கலைக்கழகத்திலும் வான்கூவரிலுள்ள பிரித்தானியக்கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் முதுமுனைவ ஆராய்ச்சியை மேற்கொண்டார். பிறகு ஆமிசன் எனப்படும் உயிரியத்தொழினுட்ப நிறுவனத்தில் மனிதப்பண்டுவத்துக்கான நோயெதிர்ப்புமருந்துகளை வளராக்கும் ஆராய்ச்சியாளராக இருபதாண்டுகளுக்குமேல் பணியாற்றி ஓய்வுற்றிருக்கிறார். ஒற்றை எலும்பு நிணவணுவிலிருந்து மனித மாறிமரபணுவை மிகைத்தலுக்கான ஒற்றையணு  மீநபதொவித்தொழினுட்பத்தை வளராக்குவதில் பங்கேற்றதுடன் பெமுடோமோலிர அளவத்தில் இயலிட மூலக்கூறுகளின் பிணைவிடைவினையை அளப்பதற்கான தொழினுட்பத்தையும் வளராக்கினார். 30 ஆராய்ச்சியுரைகளை மேநிலை ஆராய்ச்சியி தழ்களிலும் 30 காப்புரிமங்களையும் எழுதியி ருக்கிறார். 30க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்க ளுக்கு பயிற்சியளித்து வழிநடத்தியிருக்கிறார்.

இராசகோபாலன் பாசுக்கரன்

வ. மாசிலாமணி சென்னையிலுள்ள இந்தியத்தொழினுட்பப்பயிலகத்தில் முனைவர்ப்பட்டத்தை பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்திலும் அரேபியாவின் சாதுமன்னரின் பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சிப்பேராசிரியராக பணியாற்றி பணிநிறைவுற்றார். புற்றுநோயறிதலுக்காகதிசுக்களிலும் உடலின் குருதி போன்ற நீர்மங்களிலும் சீரொளியாலும் கிளரொளிர்வுநிறநிரலாலும் தீங்கிழைக்கழலைக்கும் தீங்கற்ற கழலைக்கும் வேறுபாடுகாணும் ஆராய்ச்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு அனைத்துலக கட்டுரைகளை பதிப்பிட்டிருக்கிறார். பணியோய்வுக்குப்பின் இந்தியாவில் சீரொளியால் நோயறிதலுக்கான அடித்தளத்தை அமைத்தல் போன்ற பல சமூகச்சேவைகளை செய்துவருகிறார்.

செல்லமுத்து அன்புச்செல்வன் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து 2010இல் அலார்கனிய வேதியியலில் முனைவர்ப் பட்டத்தை பெற்றார்.  கோழிக்கோட்டிலுள்ள  தேசியத்தொழினுட்பப்பயிலகத்தில் விரிவுரை யாளராக பணியாற்றினார். பெங்களூரிலுள்ள இந்தியவறிவியற்பயிலகத்திலும் போர்ச்சுக்கல் லிலுள்ள உயர்தொழினுட்ப்பபயிலகத்திலும் முதுமுனைவராக பணியாற்றியபின்,  2015இல் ஐரோப்பிய ஆணையத்திலிருந்து   ஆராய்ச்சித் தொகையை பெற்று   ஆங்கிலேய ஒன்றியத் திலுள்ள பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இலிருந்து அல் பல்கலைக் கழகத்தில்  வேதியியலின்   வேந்தியக்கழகத்தின் நல்கையின் ஆதரவில்   ஆராய்ச்சியை தொடர்கிறார். இவர் 34 ஆராய்ச்சிக்கட்டுரைகளை  உடனோர்மீள்பார்வையுள்ள ஆராய்ச்சி யிதழ்களில்  வெளியிட்டுள்ளார்.

கார்த்திகேயன் இராமானுசம்

நிர்வாகம்: மா. சதாசிவம்

ஆலோசகர்: செ. இரா. செல்வகுமார்

உதவி: குமார் பழனிசாமி, நடராசன் சிரீதர், நடேசன் இளங்கோ, சு. சேதுராமலிங்கம், மு. சுந்தரமூர்த்தி, பா. மோசே. செல்வகுமார், இலக்கியவேந்தன், சத்திவேல், வரதராசுலு தேவதாசு, அ. விவேக்கு, ஏமப்பிரியா, சிரி அரவிந்து, அரசு செல்லையா, விசயா இராசேசுவரி, கு. சந்திரா, நா. செண்பகமூர்த்தி